
பொதுமக்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
-கிண்ணியா நிருபர்-
மத்தியஸ்த ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கீடு மூலம் பொதுமக்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மூதூர் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம். எஸ்.எப். றொஷானா தலைமையில் பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.எஸ்.எம்.நிஜாம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதன்போது மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பவானி புஷ்பதீபன் வளவாரளாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 40 கிராம அபிவிருத்தி சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டதுடன் இங்கு நீதிக்கான அணுகல் மத்தியஸ்தம் தொடர்பான விளக்கம் மற்றும் மத்தியஸ்தர் நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.



