சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அப்டேட்ஸ்

சூர்யா தற்போது கருப்பு படத்தில் நடித்து முடித்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
மேலும் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சூர்யா தனது பிறந்தநாளை ஜூலை 23 ஆம் திகதி கொண்டாடவுள்ளார்.
எனவே அன்றைய தினம் அவரின் படங்கள் குறித்தான அறிவிப்புகள் மற்றும் அப்டேட்ஸ் கண்டிப்பாக வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு என்னென்ன அப்டேட்ஸ் வெளியாக வாய்ப்பிருக்கின்றது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

முதலாவதாக சூர்யா மற்றும் ஆர்.ஜெ பாலாஜி கூட்டணியில் உருவாகும் கருப்பு திரைப்படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவது உறுதியாகியிருக்கின்றது.

சமீபத்தில் ஆர்.ஜெ பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.
அதைத்தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்திருந்தார்.

மேலும் டீஸருடன் ரிலீஸ் திகதியும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே சூர்யாபிறந்தநாளை முன்னிட்டு கருப்பு டீசர் வெளியாவது உறுதியாகியிருக்கின்றது.

அதைத்தொடர்ந்து சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் தனது 46ஆவது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் இப்படம் ஒரு பேமிலி சப்ஜெக்ட் படமாகவும் தயாராகி வருவதாக இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்திருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகின்றது. லக்கி பாஸ்கர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்திற்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படம் ஒரு பேமிலி சப்ஜெக்ட் படமாகவும் தயாராகி வருவதாக இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் புது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் அன்றைய தினம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெங்கி அட்லூரி படத்திற்கு பிறகு சூர்யா ஜீத்து மாதவன் இயக்கத்தில் தன் 47 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் என மலையாளத்தில் இரு வெற்றிப்படங்களை கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சூர்யா போலீசாக நடிப்பதாக கூட தகவல்கள் வந்தன. என்னதான் இதற்கு முன்பு காக்க காக்க, சிங்கம் என பல படங்களில் சூர்யா பொலிஸாக நடித்திருந்தாலும் இப்படம் வித்யாசமான ஒரு பொலிஸ் ஸ்டோரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இதுவரை சூர்யா நடித்திராத ஒரு கதாபாத்திர வடிவமைப்பாக இருக்கும் என்றும் தகவல் வந்தது. இந்நிலையில் சூர்யா -ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகும் சூர்யா 47 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.