
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்
செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை சேகரித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இது தொடர்பில் மிக விரைவில் எமது கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் காத்திரமான விடயங்களை எடுத்துக் கூறுவார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
