உணவு ஒவ்வாமையால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமையால், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் சமயலறை ,பணியாளர்களினால். மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகளில் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறச்சாயங்கள் பயன்படுத்தப்பட்டமையால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபரின் பணிப்புரைக்கு அமைய, உணவு சமைப்பதற்கான செயற்கை நிறச்சாயங்கள் ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.