
விசா இல்லாத நுழைவிற்கான அனுமதியை நீடித்தது சீனா
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவிற்கான அனுமதியை சீனா நீடித்துள்ளது.
சீனா, தனது விசா கொள்கையை தளர்த்திய பின்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனாவில் 30 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.
