
அகழ்வு பணிகளில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.
அந்தவகையில் நேற்று திங்கட்கிழமை 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 47 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதிதாக அகழப்படும் குழியில் இருந்து ஒரு மண்டையோடு மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
