மட்டக்களப்பு – கறுவப்பங்கேணியில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

குறித்த இளைஞர் புகையிரத கடவையில் அமர்ந்திருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 1.30 மணிக்கு பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன் (வயது 23 ) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.