6 மாதங்களில் 120.5 பில்லியன் வருவாயை ஈட்டிய கலால் திணைக்களம்
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை கலால் திணைக்களம் 120.5 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது.
நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6 சதவீதத்தை எட்டியுள்ளது.
கலால் திணைக்கள வட்டாரங்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“120.5 பில்லியன் ரூபா அந்தக் காலத்திற்கான வருவாய் இலக்கை விட அதிகமாக உள்ளது. இது வசூல் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், கலால் துறை அரசாங்கத்திற்கு 226.7 பில்லியன் ரூபா ஈட்டிக்கொடுத்தது.
இது 2022 இல் 178.6 பில்லியனாகவும், 2021 இல் 170.3 பில்லியனாகவும் இருந்தது என தெரிவித்துள்ளது.