நவாலியில் களவாடப்பட்ட எழுந்தருளி விக்கிரகம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவிலில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்று களவாடப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் இவ்வாறு விக்கிரகத்தை களவாடி சென்றுள்ளனர், அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது, மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.