இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சி, முன்னேற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுராவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் செயல்திறனை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை அண்மையில் மதிப்பாய்வு செய்ததை தொடர்ந்து, இந்த கருத்தை ஒகமுரா வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சீர்திருத்த முயற்சிகளைப் பாராட்டிய ஒகமுரா, முக்கிய சீர்திருத்தங்கள் உறுதியான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன, பொருளாதார வளர்ச்சி வலுவடைகிறது, பணவீக்கம் குறைவாகவே உள்ளது, இருப்புக்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில், இலங்கையின் அதிகாரிகள், தமது நிதியத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் துணை நிர்வாக இயக்குநரும், செயல் தலைவருமான கென்ஜி ஒகமுரா வலியுறுத்தியுள்ளார்