மட்டக்களப்பு காத்தான்குடியில் விபத்து: 17 வயது இளைஞன் மரணம்
மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிர் இழந்துள்ளார்.
காத்தான்குடியை சேர்ந்த முஹம்மட் (வயது -17) என்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
காத்தான்குடி கடற்கரை வீதியூடாக இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞன் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் குறித்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Beta feature