நோயின் வீரியம் தாங்க முடியாத முதியவர் தவறான முடிவு

-யாழ் நிருபர்-

யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம் (வயது – 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்ததுள்ளார்.

மேலும் அவரை மீட்டு உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.