சிகாகோ நகரில் துப்பாக்கிசூடு – நால்வர் பலி
அமெரிக்கா சிகாகோ நகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விழாவில் கலந்துக் கொண்டவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.