செம்மணியில் 40 மனித எச்சங்கள் மீட்பு
செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த அகழ்வு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.