சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார்.

 

அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.