எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய படியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு, அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.

ஸ்டார்லிங்க் அறிமுகம் குறித்த செய்தியை எலோன் மஸ்க் உறுதிப்படுத்தினார், அவர் இந்த சேவை இப்போது இலங்கையில் செயல்பாட்டுக்கு வருவதாக அறிவித்தார், இந்த முயற்சி நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அதிவேக இணைய அணுகலை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.