பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளனர்.
விபத்தின் போது கப்பலில் 65 பயணிகள் பயணித்ததாகவும் அதில் 23 பேர் மீட்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து பாலி தீவுக்கு, புறப்பட்ட அரை மணி நேரத்திலே இந்த கப்பல் கவிழ்ந்துள்ளது.