இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான, முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் சரித் அசலங்க 106 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
இந்தநிலையில் 245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 35.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.