அண்மை காலங்களில் கணவன்–மனைவி இடையே அதிகரித்து வரும் மனமுறிவு

 

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல; அது உணர்வு புரிதல் ஒற்றுமை நம்பிக்கை ஆகியவற்றின் மீது அமையக்கூடிய ஒரு வாழ்க்கைப் பயணம் ஆகும். இந்த பயணத்தில் தோழமை, பரஸ்பர மரியாதை மற்றும் கருணை ஆகியவை உறவை வலுப்படுத்தும் முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன.கணவன்–மனைவிக்குள் உருவாகும் உறவு, ஒரு குடும்பத்தின் உறுதியான மூலக்கல்லாகும்.

ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு செயல்படும்போது இந்த உறவு பாதுகாப்பான உணர்வுப் பொருந்திய நீடித்த பிணைப்பாக உருவாகும்.

அண்மை காலங்களில் கணவன்–மனைவி இடையேயான மனமுறிவு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதற்கு காரணமான உளவியல் காரணிகள்

1. தொடர்பு குறைபாடு
– உணர்வுகளை வெளிப்படுத்த தவறு
– பேசும் போதிலும் புரிதல் இல்லாத நிலை
– நம்பிக்கையற்ற உரையாடல்

2. எதிர்பார்ப்புகளில் வேறுபாடு
– திருமண வாழ்க்கை,  பாசம் குடும்ப பங்கு குறித்த எதிர்பார்ப்புகள் ஒத்திருக்காமல் போதல்
– ஒருவரின் பார்வை மற்றவருக்கு புரியாமை

3. பணியாற்றும் அழுத்தம்
– வேலை அழுத்தம், நேரமின்மை
– வீட்டில் நேரத்தை செலவிட இயலாமை

4. பொருளாதார சிக்கல்கள்
– பணம் பற்றிய விவாதங்கள்
– செலவுகள், கடன்கள் குறித்து ஒருமித்த முடிவுகள் இல்லாமை

5. உணர்வுப்பூர்வ தூரம்
– பாசம், அக்கறை குறைவடைதல்
– கவனிக்காமை, எதிர்மறை விமர்சனங்கள்

6. நம்பிக்கை இழப்பு
– வெளிப்படையான நடத்தை இல்லாத நிலை
– சந்தேகம், பிரிவினை
– பொய்யான வாக்குறுதி, வாக்குறுதி மீறல்

7. சமூக ஊடக தாக்கம்
– ஒப்பீடு பொய்யான எதிர்பார்ப்பு
– தனிப்பட்ட இடம்
– சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடுவதால் துணையுடன் செலவிடும் நேரம் குறைதல்

8. மனநல பிரச்சனைகள்
– டிப்பிரஷன், கவலை, மன அழுத்தம்

9. பாலியல் துருப்பிடிப்பு
– அக்கறை குறைபாடு, பிணைப்பு இல்லாமை
– உணர்வுகளின் மாறுபாடுகள்

10. குடும்பதலைமுறை தலையீடு
– பெற்றோர் அல்லது உறவினர்களின் ஒழுங்கற்ற தலையீடு
– தனியுரிமை இழப்பு

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் மனமுறிவை தீர்க்க கீழ்காணும் உளவியல் அடிப்படையிலான தீர்வுகள் மிக முக்கியம்:

✅ 1. திறந்த உரையாடல்
– உணர்வுகளை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பகிர்ந்துகொள்வது
– குறை கூறும் போது குற்றம்சாட்டாமல் பேசுவது (உதாரணம் ‘சமையல் நன்றாக இல்லை’ என்பதைத் தவிர்த்து ‘அடுத்த முறை இதை விட அருமையாக சமைக்கலாம்’ என கூறுவது)

✅ 2. பரஸ்பர புரிதல்
– ஒருவரின் பார்வையை மற்றவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது
– உணர்ச்சிகளை மதிக்கக்கூடிய முறையில் நடந்து கொள்வது
– துணைக்கு பிடிக்காதவற்றை செய்வதை தவித்து உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

✅ 3. நேரம் செலவிடுதல்
– ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குதல்
– பிடித்தது, பிடிக்காதது என்பற்றை மனம் விட்டு பேசுதல்
– சிறிய செயல்கள் கூட இணைப்பை வளர்க்கும் (உதாரணம்:- ஒன்றாக உணவு சமைத்தல்)

✅ 4. பொறுப்பு பகிர்வு
– வீட்டுப்பணிகள், பிள்ளை பராமரிப்பு போன்றவற்றில் சம பங்கு
– ஒருவருக்கே அழுத்தமாகிவிடாமல் பார்த்தல்

✅ 5. மனநல ஆலோசனை
– தம்பதியர் ஆலோசனை பெறுதல்

✅ 6. எதிர்பார்ப்புகளை சமன்செய்தல்
– திருமணத்திற்கான நிஜமான  எதிர்பார்ப்புகளை வைத்திருத்தல்
– ஒருவரை மாற்ற நினைப்பதைவிட, ஏற்றுக்கொள்வது

✅ 7. நம்பிக்கை கட்டமைத்தல்
– பொய்கள் தவிர்த்து நம்பிக்கையை மீட்டெடுத்தல்
– சின்ன செயல்களிலேயே நம்பிக்கையை பெருக்குவது

✅ 8. பகிர்வு மற்றும் அக்கறை
– தினமும் ‘நன்றி’ அல்லது ‘நீங்க என் வாழ்க்கையில் முக்கியம்’ என சொல்வது
– தட்டிக்கேட்டல் இல்லாமல் அன்பாக அணுகுவது

✅ 9. எல்லைகளை மதித்தல்
– தனி நேரம், தனி விருப்பங்களை மதிப்பது
– துணையாகவே இருப்பினும் அனைத்து விடயங்களிலும் அனுமதி கேட்டல்
– மேலாளராய் அல்ல, பங்குதாரராய் இருப்பது

✅ 10. கோப முகாமைத்துவம்
– கோபத்தின் போது பேசுவதை தவிர்த்து, சமயத்தில் பேச முயற்சிக்கவும்
– சத்தம், விமர்சனம், வீண் கூச்சல் தவிர்த்தல்

கணவன்–மனைவி உறவு என்பது உயிரோட்டமிக்க, அன்பும் நம்பிக்கையும் நிரம்பிய பிணைப்பாகும். இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிம்மதிக்கும், உறுதிக்கும் அடித்தளமாய் அமைகிறது. இந்த உறவின் வலிமை, அவர்களது பரஸ்பர புரிதல், சிந்தனைப் பங்கிடல், உணர்வுப் பகிர்வு, மற்றும் நம்பிக்கையின் மீது கட்டப்படும். உறவில் ஏற்படும் சவால்களை முறையாக எதிர்கொண்டு, மனம் திறந்த உரையாடலுடன் முன்னேறும்போது, அது ஒரு வளர்ச்சியான, உறுதியான வாழ்க்கைத் துணையாய் மாறும். எனவே, இந்த உறவினை கவனமாக, அக்கறையோடும், பொறுப்போடும் பேணுவது மிக அவசியம்.

யோகராஜா பவ்யா
2ம் வருடம்
உளவியல் துறை
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.