பாடசாலை சிற்றுண்டிசாலையில் அதிரடி பரிசோதனை
-கிண்ணியா நிருபர்-
திருணோமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஏ.எம்.எம். அஜித் தலைமையில், அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் கிண்ணியாவின் பிரபலமான பாடசாலை ஒன்றில் இன்று புதன்கிழமை திடீர் பரிசோதனை மேற்கொண்ட போது, அங்குள்ள சிற்றுண்டி சாலையில் மாணவர்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் அகற்றப் பட்டது .
இதன்போது, மாணவர்களுக்கு போஷாக்கு நிறைந்த சுகாதாரமான உணவுகளை வழங்கும் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இதனை செய்ய தவறும் பட்சத்தில், பாடசாலை சிற்றுண்டி சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் மிக விரைவில் கிண்ணியாவில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டு சிற்றுண்டி சாலையில் பரிசோதனை முன்னெடுக்கப்படும், என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.