செம்மணி மனிதப் புதைகுழி- இன்றும் முக்கியமான எச்சங்கள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாதுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.