விலங்குகளை வேட்டையாடினால் முறையிட தொலைபேசி இலக்கம்
சட்டவிரோதமான முறையில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.