இளைஞர் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.