“கேப்டன் கூல்” என்ற வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்துள்ள மகேந்திர சிங் தோனி

கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் “கெப்டன் கூல்” என்ற வாசகத்தை Trademark ஆக பதிவுசெய்ய மஹேந்திர சிங் தோனி விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“கேப்டன் கூல்” என்பது ஒரு தலைவராக அவரது அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் பிரபலமான பெயர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விண்ணப்பம் ஜூன் 5 ஆம் திகதி வர்த்தக முத்திரைகள் பதிவேடு போர்டல் மூலம் அதிகாரப்பூர்வமாக ஒன்லைனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தைப் பயன்படுத்த முடியாது என குறிப்பிடப்படுகின்றது.