
படகை கழுவிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதத்தில் உயிரிழந்த மீனவர்!
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை நாகர்கோவில் கடற் பகுதியில், படகுகளை கழுவிக் கொண்டிருந்த வேளை, அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு, குறித்த மீனவருக்கு மேல் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த மீனவர், பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பாக, மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

