விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்த கரடியால் விமானங்கள் ரத்து!
ஜப்பானின், ஹிகஷின் நகரிலுள்ள விமான நிலையத்திற்குள் கரடியொன்று நுழைந்து, விமான ஓடுதளத்தில் சுற்றித்திரிந்ததால் விமானங்கள் பயணிக்கவும், தரையிறங்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், விமான நிலையத்திற்கு அருகே இருந்த வனப்பகுதிக்குள் கரடி சென்றதையடுத்து விமான சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.