எல்லை தாண்டிய 08 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாரை அண்மித்த இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 8 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, படகொன்றும் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் அதில் இருந்த எட்டு இந்திய மீனவர்கள் மன்னாரில் உள்ள தாழ்வுபாடு படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அண்மையில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், இந்திய கடற்றொழிலாளர் கைதுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.