
மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய வாகனம்!
-மூதூர் நிருபர்-
வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் மின்கம்பமும் சேதமாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


