பாகிஸ்தானில் நிலஅதிர்வு!
பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.