கூகுளில் புதிய வசதி அறிமுகம்
உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தேடுதலுக்கான ஒரு தளமாக கூகுளை பயன்படுத்துக்கின்றனர்.
அதே நேரம் உலகம் முழுவதும் ஏ.ஐயின் ஆதிக்கம் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
தற்போது கூகுள் தளத்திலும் ஏ.ஐ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
கூகுள் சேர்சில் ஏ.ஐ வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கடினமான கேள்விகளுக்கு பதில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் தகவல், குரல், புகைப்படம் என்பவற்றை பதிவிட்டும் தேடக்கூடிய வசதிகளை கூகுள் வழங்குகின்றது.