தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகர் விஜய் இற்கும் சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங் இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் தூதரக அதிகாரி தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய்யை இன்று மதியம் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.