இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அதிகாரத்தை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதன்படி, தவிசாளராக பாலகிருஸ்ணன் பாலேந்திரனும் பிரதி தவிசாளராக பாலசுப்ரமணியம் கோணேஸ்வரியும் தெரிவாகியுள்ளனர்.
தவிசாளர் தெரிவின் போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சர்வஜன அதிகாரம் ஆகிய கட்சிகள் இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளன.