காதலுக்கு மறுப்பு தெரிவித்த தாய்: காதலனுடன் சேர்ந்து மகள் செய்த கொடூர செயல்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் தனது மகளின் காதல் உறவை மறுத்ததால், தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

தனது மகள் காதல் உறவில் இருப்பதாகத் தாய்க்குத் தெரியவந்துள்ளது. தாய் மகளிடம் காதல் உறவைக் கைவிடுமாறு வற்புறுத்தி வந்ததுடன் திட்டியுள்ளார்.

தாய் திட்டியதால் மனமுடைந்த மகள், தனது காதலன் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து தனது 39 வயது தாயைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த மகளின் காதலனுக்கு 19 வயது என்றும் காதலனின் சகோதரனுக்கு 18 வயது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மகளின் காதலனும் மற்றும் அவரின் சகோதரனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.