அம்பாறையில் நீண்ட காலமாக மக்களை அச்சுறுத்தி வந்த இராட்சத முதலை பிடிபட்டது!

-அம்பாறை நிருபர்-

அம்பாறை-பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில், ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த,  8 அடி நீளமுடைய  இராட்சத முதலை இன்று வெள்ளிக்கிழமை காலை பிடிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.