அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை : 1 மில்லியன் ரூபா அபராதம்

மஹரகமவில் உள்ள ஒரு வியாபார நிலையத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்பளை செய்த குற்றச்சாட்டில் குறித்த வியாபார நிலையத்துக்கு 1 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து கங்கொடவில நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இவ்வாறு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் குறித்த வியாபார நிலையத்தை சோதனையிட்ட போது இவ்விடயம் தெரிய வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.