
போலி கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற முயன்ற யாழ்.இளைஞர்கள் இருவர் கைது!
போலியான இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி, இத்தாலிக்குச் செல்ல முயன்ற இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
அபுதாபி வழியாக இத்தாலிக்குச் செல்ல முயன்ற போது குறித்த இளைஞர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்கள்
சந்தேக நபர்கள் எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபிக்குச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
