நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று, நோபல் குழு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News