கொழும்பு பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தப்பிச் சென்றதாக, பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவரவில்லை இச்சம்பவம் தொடர்பில் , பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.