
ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியா பயணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வெளிவிவகார அமைச்சில் பணியாற்றிய 2 அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
