சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல்: 22 பேர் பலி
சிரியா – டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் இடம் பெற்ற ஞாயிறு ஆராதனையின் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. எனினும் இதுவரையிலும் குறித்த குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.