யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று சனிக்கிழமை தெல்லிப்பளை காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு மற்றும் பருத்தித்துறை மூன்றாம் வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.
காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பமாகியது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீவநாதன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.