யாழில் மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்து: இளைஞன் பலி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் விருந்தினர் விடுதியின் மின் தூக்கியில் செல்லும்போது தலையை மின்தூக்கிக்கு வெளியே எடுத்ததால் தலை சுவருடன் மோதி குறித்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகிதிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.