
மூதூரில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
-மூதூர் நிருபர் –
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்ற போலி செய்திகள் பரவிவருகின்றது.
இதனை நம்பி மூதூர் பகுதி மக்கள் மூதூரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை நிரப்பியதை காணமுடிந்தது.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள எரிபொருள் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவடைந்தது.
இந்நிலையில் , இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
