
களுவாஞ்சிக்குடியில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை
ஈரான் – இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
அதன்படி மட்டக்களப்ப களுவாஞ்சிக்குடியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் இன்று செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசை காணப்படுகின்றது.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
