நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுத்தர் ஒருவர் கைது!

ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும், எழுத்தர் (Clerk) ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மற்றுமொரு நபருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.