
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்!
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது, தவிசாளராக முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் தெரிவு செய்யப்படுள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட இவர், இன்று அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு தமது ஆதரவினை தெரிவித்து இணைந்து தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார்.
இதன்போது 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேசபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை, கிழக்கு மாகாண உளளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.முகமட் அஸ்மி முன்னிலையில், தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்று சபையில், ஐக்கிய மக்கள் சக்தி – 08, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 06, தேசிய மக்கள் சக்தி – 02, இலங்கை தமிழ் அரசு கட்சி – 01, சுயேட்சைக்குழு – 01 என உறுப்பினர்களை கொண்டுள்ளது.
தவிசாளர் தெரிவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முகமட் கனீபா முகமட் பைருஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக எம்எம்.எஸ்.எம். கலாட்டீன் முன்மொழியப்பட்ட நிலையில், அக்கட்சிகளின் ஆதரவுடன் 9 மற்றும் 8 எனும் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த முகட் கனீபா முகமட் பைருஸ் தவிசாளராக தெரிவானார்.
அப்துல் கமீது நுபைர் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர் சபைக்கு கலந்துகொள்ளவில்லை.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், எம் எல் எம் ஹிஸ்புல்லா மற்றும் ஏறாவூர் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.







