ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது!

ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

17 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கொண்ட ஏறாவூர் நகர சபையில் தவிசாளர் உப தவிசாளர் தெரிவுக்கான இன்றைய அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் ஒருங்கிணைப்பு செயலாளர் முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் முன்மொழிந்து வழிமொழியபட்டார்.

அதனைப் போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பர்லின் முன்மொழித்து வழிமொழியப்பட்டார்.

இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.எஸ். நழீமுக்கு ஆதரவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 07 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த 01 உறுப்பினர் என மொத்தமாக 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம். எஸ். சமீமுக்கு (பர்லின்) ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 04 உறுப்பினர்களும், தமிம் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினரும் என 07 உறுப்பினர் வாக்களித்தர்

இதன் பிரகாரம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MSM.நழீம் 02 மேலதிக வாக்குகளால் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக எம். எஸ்.நழீம் தெரிவு செய்யப்பட்டார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News