
மதவாச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு!
அநுராதபுரம், மதவாச்சி, சங்கிலிகனதராவ குளத்திற்கு அருகில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சி, சங்கிலிகனதராவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது அநுராதபுரம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா இல்லையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
