சாணக்கியன் : குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல – ஜனா தெரிவிப்பு (வீடியோ இணைப்பு)

எனது கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யார் ? கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல என்பதை சாணக்கியன் புரிந்துகொண்டு ஏனையவர்களை தூற்றுவதை நிறுத்தி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என முன்னாள் நா.உ. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

 

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் நா. உறுப்பினரும் ,ரொலே கட்சியின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது இதன் பேது நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் என்பற்றி உண்மைக்கு புறம்பாக பல அவதூறுகளை வெளிப்படுத்தினார்

மண்முனை தென் ஏருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் 20 உறப்பினர் கொண்ட அந்த சபையில் தவிசாளர் தெரிவு ஒரு இக்கட்டான நிலையில் நடைபெற இருந்தது.

அந்த வகையில் எமது கட்சி உறுப்பினர் திறந்த வாக்கெடுப்பை கோரியது ஆனால் தமிழரசு கட்சி இரகசிய வாக்கெடுப்பை கோரியதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழரசு கட்சியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து அங்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.

எனவே இந்த இரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தார் என யாராலும் ஊகிக்க முடியாது இருந்த போதும் எமது கட்சி உறுப்பினர் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தார் என்பது எப்படி தெரியும் அதனை சாணக்கியன் எப்படி உறுதிப்படுத்தினார்? எப்படி என் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்? என ஜனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் ரிஎம்வி கட்சியின் உறுப்பினர் ஒருவரை உள்வாங்கியது போல , தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஏன் தமிழரசு கட்சிக்கு வாக்களித்திருக்கு முடியாது.

மாவட்டதில் சகல பிரதேசசபையில் தமிழரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை மண்முணை ஆரையம்பதி சபை தவிசாளருக்கு ஆதரவாக எமது கட்சி உறுப்பினர் இருந்தார்.

அவ்வாறே வியாழக்கிழமை காலையில் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போதுகூட எமது கட்சி உறுப்பினர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தாரா?.

செங்கல பிரதேச சபைக்கு தவிசாளரை ஏனைய நா.உறுப்பினர்கள் தெரிவு செய்திருந்த போது அங்கு சாணக்கியன் வேறு ஒருவரை தெரிவு செய்ததாக அங்கு குழப்பம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தத இந்த நிலையில் இவரால் முன்மொழிந்த உறுப்பினர் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவுக்கு சமூகமளிக்காமல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே மண்முணை தென்ஏருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது கட்சி உறுப்பினர் வாக்களித்திருக்கு முடியாது என எப்படி இவர்களுக்கு தெரியும்.

உண்மையில் சாணக்கியன் என்னை தேடிவந்து கலந்துரையாடினார் , தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் வினோ அவ்வாறு மட்டக்களப்பு மாநகரசபை தெரிவு செய்யப்பட்ட முதல்வர் பிரதி முதல்வர் வந்து சந்தித்தனர் ஏன் இறுதி நேரத்தில் நேற்று எம்.சுமந்திரன் என்னுடன் தொலைபேசியல் தொடர்பு கொண்டார்.

ஆனால் இறுதிவரை சில கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் அவர்கள் எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை எந்தவொரு சபையிலும் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வரவில்லை ஆனால் இன்று முஸ்லீம் காங்கிரஸ், சி.வி விக்கினேஸ்வரனுடன், மற்றும் சஜீத் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன் டக்ளஸ் தேவானந்தாவை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர்.

இருந்த போதும் ஜனநாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 106 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலையில் எங்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க கூடிய இடங்களில் வாக்களித்து வருகின்றோம். கடைசிவரை சில கோரிக்கைகள் நிறைவேற்றலாம் என இருந்தோமே தவிர இவர்களுக்கு எதிரா நாங்கள் செயற்படவேண்டும் என்று இருக்கவில்லை.

எனவே மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாள் தெரிவில் திறந்த வாக்களிப்புக்கு கோரியிருந்தால் அந்த உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும் எனவே அதைவிடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை வைப்பதை சாணக்கியன் முதலில் தவிர்க்க வேண்டும்.

இன்று பிரதேச சபைகளை அமைப்பற்கு கூட பண ரீதியான மற்றும் வேறு நலன் சார்ந்த பல டீல்கள் நடைபெறுகின்றது இன்று மாலை பட்டிப்பளை பிரதேச சபைக்கான தெரிவிற்கு நேற்று இரவு ஒரு மணிவரை ஒரு சில உறுப்பினர்களை சந்தித்து டீல் பேசியுள்ளனர்.

வாழைச்சேனையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது உறு;பினர் வாக்களித்தார் ஆனால் நா.உ. சாணக்கியன் தென்எருவில்பற்று பிரதேச சபையில் நடந்த சம்பவத்தின் பின்னர் நாங்கள் பயந்து தமிழரசு கட்சிக்கு வாக்களித்தாக பேசியுள்ளமை விசித்திரமானது

எனவே இறால் தன்னுடைய தலையில் கழிவை வைத்துகொண்டு நாறுது என கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு கட்சியை நீதிமன்றம் கொண்டு சென்று மக்களை புதினம் பார்க்க வைக்கும் நீங்கள் என்னை எனது கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு சாணக்கியன் யார்? என்ன அருகதை இருக்கின்றது கட்சிக்கு மாறாக நான் நடந்தால் எனது கட்சி எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதை கேட்பதற்கு சாணக்கியனுக்கு அதிகாரத்தை யார் கொடுத்தது.

43 வருடமாக ஒரே கட்சியில் ஒரே கொள்கையுடன் தமிழ் தேசியத்துக்காக ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி அகிம்சை போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் ஒரே கட்சியில் நான் பயணத்துக் கொண்டிருக்கின்றேன்

ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் தேசிம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பு என்ன? தமிழ் மக்களின் தேவை என்ன? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் வெறுமனவே கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களை தூற்றுவதை விமர்சிப்பதை சாணக்கியன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.