விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை: போதைப்பொருட்களுடன் 407 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 407 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளுடன் 119 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 148 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 138 பேரும், மாவா போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 206 கிராம் 903 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 167 கிராம் 476 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 810 கிராம் 305 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 519 கிராம் மாவா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.